தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடய சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், சுவாமியும், அம்மனும் காலை மற்றும் மாலை நேரத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவிழாவின் 2ஆம் நாள் நிகழ்ச்சியில் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்கக் கேடயச் சப்பரத்திலும், வள்ளி அம்மன் சிறிய பல்லாக்கிலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.