தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துராஜா, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கள உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர் தமது மனைவி பத்மாவதியுடன் சேர்ந்து பலரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி சுமார் 12 லட்சம் ரூபாய் பணம் வசூலித்ததாக கூறப்படுகிறது.
இருப்பினும் கூறியபடி அரசு வேலை வாங்கி கொடுக்கவில்லை. இதனால் பாதிக்கப்பட்ட இருவர் அளித்த புகாரின் பேரில் மாரிமுத்துராஜா – பத்மாவதி தம்பதியை போலீசார் கைது செய்தனர். மேலும் மோசடியில் தொடர்புடைய சரவணன் என்பவரை தேடி வருகின்றனர்.