தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே பிளாஸ்டிக் உற்பதி நிறுவனத்தில் தீ விபத்து
ஏற்பட்டது.
கரைகொண்டார் குளம் கிராமத்தில் சிவா என்பவருக்கு சொந்தமான பிளாஸ்டிக் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நள்ளிரவில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீவிபத்தில் சுமார் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.