தென்காசி மாவட்டம், பண்பொழி அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வரும் ஒற்றை யானையால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கரிசல்குளத்தில் விளைநிலங்கள் அதிகம் உள்ள பகுதியில் ஒற்றை யானை முகாமிட்டுள்ளது. இந்த யானை வனப்பகுதிக்கு முகாமிட்டுள்ள நிலையில், யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், யானையை விரட்டும் வரை பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வனத்துறை ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.