தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த
நால்வரை போலீசார் கைது செய்தனர்.
பாவூர்சத்திரம் அருகே கருணாகரன் மற்றும் கோமதி சங்கர் ஆகிய இருவரது வீட்டில் ஆளில்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள், தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், திருட்டில் ஈடுபட்ட கணேசன், சங்கரராமன், ரமேஷ் மற்றும் செந்தில்குமார் ஆகிய நால்வரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 157 கிராம் தங்க நகைகள், இரண்டரை லட்சம் ரூபாய் பணம், இரண்டு கார்கள், ஏழு செல்போன்கள் உட்பட 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.