ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் காமதேனு கலை அறிவியல் கல்லூரியில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கலந்து கொண்ட வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
அப்போது ஒரே நிற சீருடை அணிந்தபடி பெண்கள் வள்ளி கும்மி ஆட்டம் ஆடினர். அதைத் தொடர்ந்து தெம்மாங்கு பாடல், பம்பை ஆட்டம், அண்ணமார் கருப்புச்சாமி ஆட்டம், பவளக்கொடி ஆட்டம் என பல்வேறு வித ஆட்டங்கள் அரங்கேறின. அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் விதமாக வள்ளி கும்மி நடன நிகழ்ச்சி நடைபெற்றதாக கலைக் குழுவினர் தெரிவித்தனர்.