தமிழகத்தில் உள்ள 25 சுங்கச்சாவடிகளில் வரும் 1-ம் தேதி முதல், 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 67 சுங்கச்சாவடிகள் உள்ளன. இந்த சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்கள் என 2 முறை கட்டணம் மாற்றி அமைக்கப்படுகிறது.
தேர்தல் காரணமாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கட்டணம் உயர்த்தப்படவில்லை, ஆனால், ஜுன் மாதம், 36 சுங்கச்சாவடிகளில் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் வரும் 1 ஆம்தேதி முதல், ஏனைய 25 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 7 சதவீதம் வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.