தெலங்கானா மாநிலம், விகாரபத் மாவட்டத்தில் ரயில் தண்டவாளத்திற்கு இடையே கால் சிக்கிக்கொண்டபோது சாதுர்யமாக சிந்தித்து உயிர் பிழைத்த பெண்ணின் வீடியோ வெளியாகியுள்ளது.
நவான்ஹி ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது ஒரு பெண்ணின் கால் தண்டவாளங்களுக்கு இடையே சிக்கிக்கொண்டது. அதே நேரத்தில் சரக்கு ரயில் ஒன்று அந்த வழியாக வேகமாக வருவதைக் கண்டு அச்சமடைந்த அந்த பெண் தமது உடலை குறுக்கி தண்டவாளங்களுக்கு இடையே படுத்து கொண்டார்.
பின்னர் சரக்கு ரயில் சென்றவுடன் தண்டவாளத்தில் சிக்கிய தன்னுடைய காலை பத்திரமாக மீட்டு அங்கிருந்த சென்றார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.