சென்னை பெரியமேட்டில் பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் ஆகியோர் ஊக்கத் தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
சென்னை பெரியமேட்டில் உள்ள ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், பாரிஸ் ஒலிம்பிக்ஸில் பங்கேற்ற தமிழக தடகள வீரர்கள் மற்றும் பயிற்சியாளருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
அப்போது தடகள வீரர்கள் சுபா , வித்யா , ராஜேஷ் , பிரவீன், ஜெஸ்வின் மற்றும் சந்தோஷ் ஆகியோருக்கு தலா 1 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. மேலும், இந்திய தடகள அணியின் பயிற்சியாளர் பிரேமானந்த்துக்கு 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.
அப்போது பேசிய தடகள வீரர்கள், இதுவரை இல்லாத அளவுக்கு விளையாட்டு வீரர்களுக்கு தற்போது பல்வேறு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் அரசு உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.