திருநெல்வேலி மாவட்டத்தில் விதிமீறி இயங்கி வந்த 3 குவாரிகளின் உரிமையாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் 10 சக்கரங்களுக்கு மேல் கொண்ட கனரக வாகனங்கள் மூலம் கனிமங்களை கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் தொடர் விதிமீறலில் ஈடுபட்ட 3 குவாரி உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டதுடன், நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விதிமீறலில் ஈடுபடும் குவாரிகள் குறித்து புகாரளிக்க முன்வர வேண்டும் என திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.