சேலம் மாவட்டம், ஆத்தூரில் பாதி வழியில் அரசு பேருந்து பழுதாகி நின்றதால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கல்லாநத்தம், முட்டல் கிராமங்கள் வழியாக பயணிகளை ஏற்றி சென்ற அரசு பேருந்து ஆத்தூர் பேருந்து நிலையம் நோக்கி சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது ஆத்தூர் நகர காவல் நிலையம் அருகே அரசு பேருந்து பழுதாகி சாலையில் நின்றது. இதனால் பயணிகள் பாதி வழியிலேயே கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் அங்கு சென்ற ஆத்தூர் பணிமனை ஊழியர்கள் பேருந்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.