மேற்கு வங்க நடிகை ஒருவர் அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில், மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
படப்பிடிப்பு தளத்தின்போது இயக்குநர் ரஞ்சித் தமக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கொச்சி போலீஸில் மேற்கு வங்க நடிகை ஒருவர் புகார் அளித்தார். இதனிடையே, இயக்குநர் ரஞ்சித் மீது ஹேமா கமிட்டி அறிக்கையும் பாலியல் குற்றச்சாட்டை ஆதாரப்பூர்வமாக முன்வைத்தால், இயக்குநர்கள் சங்கத் தலைவர் பொறுப்பிலிருந்து அவர் விலகினார்.
இந்நிலையில்,மேற்குவங்க நடிகையின் புகாரின் அடிப்படையில், இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு செய்திருப்பதாக காவல் துறை ஆணையர் ஷியாம் சுந்தர் தெரிவித்தார்.