தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் மாநில அலுவலக செயலாளர் வழக்கறிஞர் தமிழ்மதி அளித்துள்ள புகாரில், “அரசியல் நாகரீகம் இல்லாமலும், சட்ட விரோதமாகவும் அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை விஜய் பயன்படுத்தியுள்ளார்” என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும், “இது தொடர்பாக, நடிகர் விஜய் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” எனவும், “தவெக கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்றவேண்டும்” என்றும் அந்தப் புகார் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.