தமிழ் ஜனம் செய்தி எதிரொலியாக மாஞ்சோலை தேயிலைத் தோட்ட பெண் தொழிலாளர்களின் உண்ணாவிரத போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள மாஞ்சோலை தேயிலை தோட்ட பெண் தொழிலாளர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்திருந்தனர்.
தேயிலை தோட்டங்களை அரசு எடுத்து நடத்த வேண்டும், தொழிலாளர்களுக்கு இழப்பீடான 25 லட்சம் ரூபாய் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக தமிழ் ஜனம் செய்தி வெளியான நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட பெண் தொழிலாளர்களுடன் காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், இடைக்கால நிவாரணமாக மாதந்தோறும் 10 ஆயிரம் ரூபாயை அரசிடம் இருந்து பெற்று தருவதாக உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக பெண் தொழிலாளர்கள் அறிவித்தனர்.