கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் எஸ்.பி.ஐ கிளை வங்கியின் கண்ட்ரோல் பேனலில் கரப்பான் பூச்சி புகுந்து அதிகாரிகளை கதிகலங்க வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
குளச்சல் நகரின் மையப்பகுதியில் செயல்பட்டு வந்த எஸ்.பி.ஐ கிளை வங்கியில் இரவு நேரத்தில் எச்சரிக்கை மணி இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள் காவல்நிலையத்திற்கு தகவலளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் வீரர்கள், வங்கி வளாகம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் வங்கியின் உள்ளிருந்து மின்பொருள்கள் எரியும் நாற்றம் வந்ததால் வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
அப்போது, எச்சரிக்கை அலாரத்தின் கண்ட்ரோல் பேனலில் புகுந்த கரப்பான் பூச்சியால் அலாரம் ஒலித்தது தெரியவந்தது. இதனைக் கண்டு திகைத்த அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்து அலாரத்தை அணைத்தனர்.