விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 3 வருடங்களாகியும் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாததை கண்டித்து, விழுப்புரத்தில் உள்ள புதிய பேருந்து நிலையம் அருகே ஓய்வுபெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை மறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற போக்குவரத்து கழக தொழிலாளர்களை போலீசார் கைது செய்தனர்.
இதனால் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளுக்கு முன்பாக சாலையில் படுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மறியலின் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர்.