நடிகர் விஜய்யின் தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கோரி விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்தார்.
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் செப்.23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறுகிறது.
இந்நிலையில் மாநாட்டிற்கு 1 புள்ளி 50 லட்சம் பேர் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் மாநாட்டிற்கு அனுமதி வழங்கக்கோரியும், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் பாதுகாப்பு வழங்கக்கோரியும் கட்சியின் பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தார்.