திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பாஜக உறுப்பினர் சேர்க்கைக்கான கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், விக்கிரமசிங்கபுரம், சிவந்திபுரம், ஆறுமுகம்பட்டி, அடையக்கருங்குளம், அகஸ்தியர் பட்டி, கோட்டராங்குளம் பகுதியில் உள்ள சக்தி கேந்திரம், மண்டல கேந்திரம் செயற்குழுவை சேர்ந்தவர்களுக்கு, வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரை உறுப்பினராக இணைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், பாஜக உறுப்பினர் சேர்க்கை இயக்கம் 2024 மண்டல் பயிலரங்கத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் 25 புதிய அடிப்படை உறுப்பினர்கள் சேர்க்கவும் அறிவுறுத்தப்பட்டது.