காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற உலகளந்த பெருமாள் கோயில் பூர்ணகும்ப மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோயில் நகரமான காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஆரணவல்லித் தாயார் சமேத உலகளந்த பெருமாள் கோயிலில், புணரமைப்பு பணிகள் நிறைவு பெற்று, பூர்ணகும்ப மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதில், திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, கோவிந்தா கோவிந்தா என விண்ணை பிளக்கும் அளவுக்கு முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனர்.