தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி சுவாமியும், அம்பாளும் தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 24-ம் தேதி ஆவணி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன.
ஆவணித் திருவிழா 5-ம் நாள் நிகழ்ச்சியில் சுவாமிக்கும், அம்பாளுக்கும் குடைவரைவாயில் தீபாராதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமியும், அம்பாளும் தனித்தனியே தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.