கொலை வழக்கில் கைதான நடிகர் தர்ஷன் சிறையில் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதாக புகார் எழுந்த நிலையில் பெங்களூர் சிறையில் இருந்து பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.
பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தன்னுடைய ரசிகரான ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த தர்ஷனுக்கு, சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது.
மேலும் சிறையில் 3 பேருடன் அமர்ந்து தர்ஷன் புகை பிடிக்கும் படம் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக சிறை காவலர்கள் உட்பட 9 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில் தர்ஷனை பெங்களூரு சிறையில் இருந்து வேறு சிறைக்கு மாற்ற 24வது கூடுதல் முதன்மை மாநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்பேரில் பெங்களூரு சிறையில் இருந்த தர்ஷன் வட கர்நாடகாவில் உள்ள பெல்லாரி சிறைக்கு மாற்றப்பட்டார்.