திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே காய்கறி கடைக்குள் புகுந்து இளைஞரை மர்ம கும்பல் சரமாரியாக தாக்கியதில் அவர் படுகாயமடைந்தார்.
ஏனாதிமேல்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் காய்கறி கடை வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு உதவியாக அதே பகுதியை சேர்ந்த இளவரசன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் கடைக்கு வந்த 4 பேர் மாமூல் கேட்டு இளவரசனுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக கடையின் உரிமையாளர் ராஜேஷ், காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் கடைக்குள் புகுந்த மர்ம கும்பல், இளவரசனை அரிவாளால் சரமாரியாக தாக்கினர். இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக வெட்டுகாலனி பகுதியைச் சேர்ந்த விஜி என்பவரை போலீசார் கைது செய்தனர்.