சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே அதிமுக கிளை கழக செயலாளர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பாப்பநாயக்கன்பட்டி ஊராட்சியை சேர்ந்த ரவி, அதிமுக கிளை கழக செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் நடைபயிற்சிக்கு சென்ற ரவி, தனது சகோதரி ராஜேஷ்வரியின் வீட்டின் முன்பு ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இதுகுறித்து பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் ரவியின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.