சென்னை எழும்பூர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில், தமிழக பள்ளிகள் அளவிலான ஹாக்கி தொடரின் தொடக்க விழா நடைபெற்றது.
17 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான ஹாக்கி தொடரில், 6 மண்டலங்களை சேர்ந்த 12 அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன.
இப்போட்டி வரும் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு கல்லூரிகளில் விளையாட்டு பிரிவின் மூலம் எளிமையாக மேற்படிப்பை தொடர வாய்ப்புகள் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.