சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள கற்பக விநாயகர் கோவிலில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி பெருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான விநாயகர் சதூர்த்தி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கோயில் கொடி மரத்திற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் மற்றும் புனித நீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொடியேற்ற நிகழ்ச்சி சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க வெகு விமர்சியாக நடைபெற்றது. மேலும், விழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தவாரி வரும் செப்டம்பர் 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.