தனியார் மயம் செய்யப்படுவதைக் கண்டித்து, சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் இருந்து திமுக கூட்டணி கட்சி மாமன்ற உறுப்பினர்கள் வெளி நடப்பு செய்தனர்.
மேயர் பிரியா தலைமையில் நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் கூட்டத்தில் 54 முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
கூட்டத்தில், மண்டலம் 4 மற்றும்8 ஆகியவற்றில் குப்பை சேகரிக்கும் பணியை தனியாருக்கு வழங்கவும், ஏற்கனவே தனியாருக்கு வழங்கப்பட்டுள்ள மண்டலங்களில் குப்பை சேகரிக்கும் பணிகள் 4 ஆண்டுகள் கண்காணிக்கும் வகையில், 19 புள்ளி 97 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
மேலும், ஆண்டுதோறும் 50 ஆயிரம் நாய்களுக்கு கருத்தடை செய்யும் திட்டத்திற்கு, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அத்துடன், அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்டவைகள் வாங்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனிடையே, கூட்டத்தில் பேசிய பாஜக உறுப்பினர் உமா, “சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பிரஞ்சு மொழி கற்றுக் கொடுப்பதைப் போன்று இந்தியையும் கற்றுக் கொடுக்க வேண்டும்” என வலியுறுத்தினார்.