பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சி கவிதா ஜாமீன் தொடர்பாக ஆட்சேபத்துக்குரிய கருத்து தெரிவித்ததற்காக தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார்.
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் கவிதாவுக்கு அண்மையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதே வழக்கில் கைது செய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்து தான்ஜாமீன் வழங்கப்பட்டது என்றும் ஆனால் கவிதாவிற்கு வெறும் 5 மாதங்களிலேயே ஜாமின் வழங்கப்பட்டுள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்திருந்தார். இதற்கு உ ச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
இதுதொடர்பாக வருத்தம் தெரிவித்துள்ள ரேவந்த் ரெட்டி தாம் நீதித்துறையை உறுதியாக நம்புவதாக கூறியுள்ளார். இந்திய நீதித்துறை மீது மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. ஆகஸ்ட் 29, 2024 அன்று சில பத்திரிகைகளில் நான் கூறியதாக வெளியான செய்திகள், நீதிமன்றத்தையும், நீதித்துறையின் ஞானத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளது என்பதை நான் புரிந்துகொள்கிறேன்.
நான் நீதித்துறை செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவன் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன். பத்திரிகைகளில் வெளியான அந்தச் செய்திகளுக்காக நிபந்தனையின்றி வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.