கன்னியாகுமரி மாவட்டம் அரபிக் கடல் பகுதியில் சூறாவளி எச்சரிக்கையால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
அரபிக் கடல் பகுதியில் கடந்த சில வாரங்களாக பலத்த காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, வடகிழக்கு மற்றும் அதையொட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் இன்றும், நாளையும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகுகள் துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.