கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட பின்னர், அவரது பெற்றோருக்கு மருத்துவமனை தரப்பிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகள் தொடர்பான விவரம் வெளியாகியுள்ளது.
கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரது பெற்றோரை இருமுறை மருத்துவமனை கண்காணிப்பாளர், கைப்பேசியில் தொடர்புகொண்டு உடனடியாக வருமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனைத்தொடரந்து மூன்றாவது முறை தொடர்பு கொண்டு, தங்களது மகள் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். அரை மணிநேரத்துக்குள் இவ்வாறு மூன்று முறை அவரது பெற்றோரை மருத்துவமனை நிர்வாகம் தொடர்புகொண்டு பேசியுள்ளது.
இந்த விவகாரத்தில் மருத்துவக் கல்லூரி முதல்வர் சந்தீப் கோஷின் வற்புறுத்தலால் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்ய தாமதமான நிலையில், அவருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது குறிப்பிடதக்கது.