தென்காசி நகர்மன்ற கூட்டத்தில் முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
தென்காசியில் நகரமன்ற கூட்டம் தலைவர் சாதிர் தலைமையில் தொடங்கியது. இதில் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது திமுகவை சேர்ந்த நகர மன்ற துணைத் தலைவர் கே.என்.சுப்பையா, பணம் பெற்றுக்கொண்டு முறைகேடாக குடிநீர் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனையடுத்து சுப்பையாவின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள் உள்ளிட்ட பாஜக நகர்மன்ற உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.