மலையாள நடிகைகள் பாலியல் தொல்லையை எதிர்கொள்வதாக வெளியான நீதிபதி ஹேமா கமிட்டி அறிக்கைக்கு நடிகர் மோகன்லால் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணை நடைபெறுவதால், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கத்தை யாரும் சிதைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
ஹேமா கமிட்டி அறிக்கையை மாநில அரசு வெளியிட்டது சரியான முடிவு என கூறிய மோகன்லால், மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் கடினமாக உழைக்கும் ஓர் அமைப்பு என தெரிவித்தார்.
ஒரு சிலர் மீதான குற்றச்சாட்டுக்காக அனைவரையும் விமர்சிப்பது தவறானது என்றும், தவறு செய்தவர்களை தண்டிக்க வேண்டும் என்றும் நடிகர் மோகன்லால் வலியுறுத்தினார்.
இளம் நடிகர்கள் சந்திக்கும் பிரச்னைகளைக் கருத்தில் கொண்டு கேட்டறிவதாக கூறிய அவர், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என்றும் குறிப்பிட்டார்.