பிரேஸிலில் எக்ஸ் தளத்துக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பிரேஸிலில் எக்ஸ் தளத்தில் போலி தகவல்கள் பரவியதால், குறிப்பிட்ட சில கணக்குகளை முடக்க அந்நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரலில் உத்தரவிட்டிருந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்த எக்ஸ் நிறுவன அதிபர் எலான் மஸ்க், ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்கும் கருத்து சுதந்திரம் பிரேஸிலில் கேள்விக்குறியானதாக விமர்சித்தார்.
இதைத் தீவிரமாக கருதிய அந்நாட்டு உச்சநீதிமன்ற நீதிபதி, ஏற்கெனவே விதித்த அபராத தொகையை செலுத்தும்வரை எக்ஸ் தளத்துக்கு தடை விதிப்பதாக தெரிவித்தார்.