சாத்தான்குளம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், ஆலையின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாசரேத் அடுத்த குறிப்பன்குளம் கிராமத்தில் சிவசக்தி பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் சிவகாசியில் தயார் செய்யபடும் பட்டாசுகள் பதுக்கி வைக்கப்பட்டு, கோவில் திருவிழா போன்ற விசேஷங்களின்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பட்டாசு ஆலையில் நேற்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் முத்துக்கண்ணன், விஜய் ஆகிய 2 தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் படுகாயமடைந்த ஒரு பெண் உள்பட 3 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சம்பவம் தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர் ராம்குமார் கைது செய்யப்பட்ட நிலையில், வெடி விபத்தில் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் நிவாரணம் அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.