மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையிலான மலை ரயில் சேவை 23 நாட்களுக்குப் பின் மீண்டும் தொடங்கியது.
தென்மேற்கு பருவமழை காரணமாக மலை ரயில் பாதையில் பல்வேறு இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளங்கள் சேதமடைந்தன. இதனையடுத்து மூன்று வாரங்களாக சீரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன.
தற்போது பணிகள் நிறைவுற்றதால் ரயில் சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.