கோயில் நிர்வாகம் மற்றும் கட்டுப்பாடு என்பது மதம் தொடர்பானவர்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என அலகாபாத் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசம் மாநிலம் மதுரா மாவட்டத்தில், கோயில் நிர்வாகம் தொடர்பாக, 197 வழக்குகள் நீண்ட காலமாக நிலுவையில் இருந்து வரும் நிலையில் வழக்குகளை கையிலெடுத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்தியது.
அதில், கோயில்களை நிர்வகிக்கும் ‘ரிசீவர்’ என்ற நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் அதிகாரிகளே கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காணமால் இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
கோயில்களை நிர்வகிக்கும் பொறுப்பு, வேதம், சாஸ்திரம் அறிந்த, மதம் தொடர்பானவர்களிடமே இருக்க வேண்டும் எனவும், அப்போதுதான், அந்த கோயில் தொடர்பான பிரச்னைகளுக்கு விரைவில் தீர்வு ஏற்படும் எனவும் அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது
மதுரா மாவட்டத்தில் உள்ள கோயில்கள் தொடர்பான வழக்குகளில் இந்த உத்தரவை செயல்படுத்துவதை, மாவட்ட நீதிபதி உறுதி செய்ய வேண்டும். எனவும் நீதிமன்றம் வலியுறுத்தியது.