நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்கள் உட்பட சுமார் 120 தொழிலாளர்கள், தனியார் ஒப்பந்தத்தின் மூலம், இரண்டாவது சுரங்கத்தில் கடந்த 17 வருடங்களாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
தனியார் ஒப்பந்தம் முடிவடைந்ததால், வேறொரு தனியார் ஒப்பந்தத்தில், குறைந்த அளவே தொழிலாளர்களை நியமிக்கப்பட்டதாலும், பாதிக்கு மேற்பட்ட தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கூறப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள், இரண்டாவது சுரங்க நுழைவாயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெய்வேலி என்எல்சி நிர்வாகம் மற்றும் அந்நிறுவனத்தில் செயல்படும் தனியார் ஒப்பந்ததாரர்கள், திட்டமிட்டே தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று ஆள் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும், தங்களை BMC தொழிலாளராக பணி அமர்த்த வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.