வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளதாக- இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகளில் கடந்த 6 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மணிக்கு 15 கிமீ வேகத்தில் நகர்ந்து, இன்று, அதிகாலை 5.30 மணியளவில் தெற்கு ஒடிசா மற்றும் அதை ஒட்டிய வடக்கு ஆந்திரப் பிரதேசத்துக்கு அருகில் நிலை கொண்டுள்ளது..
இது விசாகப்பட்டினத்தில் இருந்து வட-வடமேற்கில் 90 கிமீ தொலைவில் (ஆந்திரப் பிரதேசம்), கலிங்கப்பட்டினத்திற்கு மேற்கே 120 கிமீ (ஆந்திரப் பிரதேசம்), மல்கங்கிரிக்கு (ஒடிசா) கிழக்கே 120 கிமீ தொலைவில், ஜக்தல்பூருக்கு கிழக்கு-தென்கிழக்கே 120 கிமீ ) மற்றும் கோபால்பூருக்கு (ஒடிசா) மேற்கு-தென்மேற்கே 220 கி.மீ தொலைவிலும், ராமகுண்டத்திலிருந்து (தெலுங்கானா) கிழக்கே 380 கி.மீ தொலைவிலும் தெற்கு ஒடிசா மற்றும் தெற்கு சத்தீஸ்கர் வழியாக மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.