கர்நாடக மாநிலம் பெங்களூருவில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை 3 மாதங்களில் பயன்பாட்டுக்கு வரும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள BEML நிறுவனம் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயிலினை கட்டமைத்து வருகிறது. இதன் பணிகளை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், புதிதாக கட்டமைக்கப்பட்டு வரும் ரயிலில் பல்வேறு பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதாக தெரிவித்தார். , அதன் வடிவமைப்பில் பல்வேறு புதுமைகள் புகுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ரயிலில் பராமரிப்பு பணியாளர்களுக்காக தனி அறை ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அஷ்வினி வைஷ்ணவ், உலகின் சிறந்த ரயில்களுடன் இந்த ரயிலை ஒப்பிடலாம் எனவும் கூறினார். அடுத்த 3 மாதங்களில் படுக்கை வசதிகொண்ட வந்தே பாரத் ரயில் சேவை பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.