சத்பாவனா திட்டத்தின்கீழ், ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர், லடாக்கில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தை சத்பாவனா திட்டத்தின்கீழ் ராணுவம் தத்தெடுத்து அங்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது வழக்கம். கடந்த 1998-ஆம் ஆண்டில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த வகையில், நிகழாண்டு பூஞ்ச் மாவட்டம் டோபா பிர் கிராமத்தை ராணுவம் தத்தெடுத்து அங்கு சாலை,பள்ளி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளை மேம்படுத்தும் பணியில் ராணுவம் ஈடுபடவுள்ளது.