எந்த துறையிலும் கடுமையான உழைப்பு இருந்தால் மட்டுமே அடுத்த நிலைக்கு செல்லமுடியும் என கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
சேலம் உடையாப்பட்டி தனியார் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழாவை, துவக்கி வைத்து அவர், மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அப்போது, மாணவர்கள் மத்தியில் பேசிய நடராஜன், மொபைல் போன் என்பது நமது தேவைக்கு மட்டுமே தவிர, நம்மை அடிமைப்படுத்திவிடக்கூடாது” எனவும், மொபைல் போனை சற்று ஒதுக்கி வையுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.