ஆந்திர பிரதேச மாநிலம் விஜயவாடாவில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு ஆய்வு செய்தார்.
ஆந்திராவின் பல்வேறு பகுதிகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விஜயவாடாவில் வெள்ள பாதிப்புகளை முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு நேரில் ஆய்வு செய்தார். அப்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தண்ணீர் வழங்கவும், மீட்பு பணிகளை துரிதப்படுத்தவும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.