குஜராத்தில் 4-ம் தேதி வரை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குஜராத்தில் இடைவிடாது கனமழை பெய்து வரும் நிலையில், அஜ்வா அணையில் இருந்து விஸ்வாமித்ரி நதிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதனால் நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியது.
இதனிடையே இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் வரும் 4-ம் தேதி வரை தெற்கு குஜராத் மற்றும் மத்திய குஜராத் பகுதிகளில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும், 12 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.