கடந்த ஆகஸ்டில் 1 லட்சத்து 74 ஆயிரத்து 962 கோடி ரூபாய் சரக்கு, சேவை வரி வசூலாகியிருப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டில் இதே காலகட்டத்தில் 1 லட்சத்து 59 ஆயிரத்து 69 லட்சம் கோடி ரூபாய் ஜிஎஸ்டி வசூலான நிலையில், நிகழாண்டில் 10 சதவீதம் கூடுதலாக வசூலாகியுள்ளதாக நிதியமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 26 ஆயிரத்து 367 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. தமிழகத்தில் 10 ஆயிரத்து 181 கோடி ரூபாய் வசூலானதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.