இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் டைம் சிறந்த கனவு அணியை தலைமை பயிற்சியாளர் கம்பீர் வெளியிட்டுள்ளார்.
கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தவரை சிறந்த வீரர்களை வைத்து கனவு அணியை தேர்வு செய்வது வழக்கமாகும். அந்த வகையில் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான கம்பீர் இந்திய அணியின் ஆல் டைம் சிறந்த அணியை தேர்வு செய்துள்ளார்.
அதில் முதலாவதாக சேவாக்கை தேர்ந்தெடுத்துள்ள அவர், 3-வது வரிசையில் டிராவிட்டை தேர்ந்தெடுத்துள்ளார். 4-வது வீரராக சச்சினையும், 5-வதாக விராட் கோலியையும் தேர்வு செய்துள்ளார். ஆல் ரவுண்டராக யுவராஜ் சிங்கை தேர்ந்தெடுத்துள்ள அவர், விக்கெட் கீப்பராக எம்.எஸ். தோனியை தேர்வு செய்துள்ளார். பந்து வீச்சாளர்களாக அஸ்வின், கும்ப்ளே, ஜாகீர் கான் மற்றும் இர்பான் பதான் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.