பாரா ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற நிஷாத் குமார், ப்ரீத்தீ பால் ஆகியோருக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது ; பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள வீரர் நிஷாத் குமார் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களது கடின உழைப்பின் பலனாக கிடைத்துள்ள இந்த வெற்றியானது, நமது நாட்டு மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளது.
பாரீஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான 200 மீ ஓட்டப் பந்தயம் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ள வீராங்கனை ப்ரீத்தீ பால் அவர்களுக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
முன்பு 100 மீ ஓட்டப் பந்தயம் பிரிவில் வெண்கலம் வெற்றுள்ள ப்ரீத்தீ பால், தற்போது இரண்டாவது பதக்கம் வென்றிருப்பது கூடுதல் மகிழ்ச்சி அளிக்கிறது. தங்களது கடின உழைப்பின் பலனாக கிடைத்துள்ள இந்த இரண்டு பதக்க வெற்றிகளின் மூலம், நமது நாட்டு மக்கள் அனைவரையும் பெருமையடையச் செய்துள்ளீர்கள் என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.