நெல்லை மாவட்டம் அருகன்குளம் அருகே அமைந்துள்ள தேவகிருஷ்ண கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி உறியடி உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
முன்னதாக உறி பானைகள் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.
பின்னர் கோயிலின் முன்பு பானைகளை கட்டி உறியடி உற்சவம் நடைபெற்றது. இதில் பெண் குழந்தைகள் கலந்துகொண்டு கிருஷ்ணர் -ராதை வேடமணிந்து உறி பானையை அடித்து மகிழ்ந்தனர்.