விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கும்பகோணத்தில் ஆறு லட்சம் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு விநாயகர் காட்சியளித்தார்.
கும்பகோணம் மடத்து தெருவில் பகவத் விநாயகர் ஆலயம் உள்ளது. இங்கு விநாயகர் சதுர்த்தி திருவிழா கடந்த 29ஆம் தேதி தொடங்கியது.
இந்நிலையில், விழாவின் நான்காம் நாளன்று உற்சவ மூர்த்தி விநாயகருக்கு ஆறு லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, குபேர விநாயகராக காட்சியளித்தார்.திரளான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.