ஆந்திர துணை முதலமைச்சர் பவன்கல்யாணின் பிறந்த நாளை ஏராளமான பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாடி வருகின்றனர்.
அவரின் 57வது பிறந்த நாளை ஒட்டி ஆந்திராவில் கப்பர் சிங் என்ற திரைப்படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
மேலும் குப்பம் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவ மாணவிகள் மைதானத்தில் அமர்ந்து பவன் கல்யாண் உருவத்தை ஏற்படுத்தினர். இந்த காட்சி காண்போரை கவரச்செய்தது.