நிதி முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானதுல்லா கானை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர்.
வக்ஃபு வாரியம் தொடர்பான நிதி முறைகேட்டில் எம்எல்ஏ அமானதுல்லா கான் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதன்பேரில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமானதுல்லா கான், தமக்கு எதிராக சதி நடப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அமலாக்கத் துறை சோதனையையொட்டி, அவரது வீடு அமைந்துள்ள பகுதியில் டெல்லி போலீஸாரும், மத்திய ரிசர்வ் காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இதனிடையே அமலாக்கத் துறையினரின் கேள்விகளுக்கு முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால், அமானதுல்லா கானை அமலாக்கத் துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.