காந்தஹார் விமான கடத்தல் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு நிகழ்ச்சி நடத்திய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த 1999-ஆம் ஆண்டு டிசம்பரில் காத்மாண்டூவிலிருந்து டெல்லி நோக்கி வந்த விமானத்தை பயங்கரவாதிகள் காந்தஹாருக்கு கடத்திச் சென்றனர். பின்னர், அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கின் முயற்சியால், விமானத்தில் பயணித்த 154 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து நெட்ஃபிளிக்ஸில் வெளியான காட்சியில், பயங்கரவாதிகளின் பெயர் சங்கர், போலா என மாற்றப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியதால், நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் பதிலளிக்குமாறு மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத் துறை சம்மன் அனுப்பியுள்ளது.